ஜெயில் லட்சுமியின்
மாஸ்டர் பிளான்
(26-4-06)மோசடி வழக்கில் ஆஜராக கோர்ட்டுக்கு வந்த ஜெயலட்சுமியிடம் வேனின் ஓரமாக நின்று எடுத்த ஜிலீர் பேட்டி...
றீதேர்தல்ல போட்டியிடுவேன்னு சொல்லியிருந்தீங்களே?
ஆமா. என்ன ஜெயில்ல போட்டதும் ஆத்திரத்துல அப்படி சொன்னேன். அப்புறமாதான் புரிஞ்சது அது நல்லதுக்குதான்னு. அதனால இந்த எலக்ஷன்ல போட்டியிடல.
றீஎன்னது ஜெயில்ல போட்டது நல்லதுக்கா?
உங்களுக்கு விசயம் தெரியாதா? ஜெயில்ல இருந்தா உடல் ஆரோக்யம் கிடைக்கும். சிலிம்மா ஆயிடலாம். தியாகி பட்டம் வேற கிடைக்கும்.
றீஜெயில்லயே காலத்த ஓட்டிட லாம்னு எண்ணமா?
இல்ல. ஆரோக்ய முகாம் முடிஞ்சதும் வெளியில வந்துடுவேன். இப்பவே கட்சி ஆரம் பிச்சி எலக்ஷன்ல நிக்க லாம்னுதான் திட்டம் போட்டிருந்தேன். ஆனா ஒரு மாசத்துக்கு 2 சீட் சம்மதமான்னு கூட்டணிக்கு கூப்பிட் டாங்க. ஏன் அவசரப் படணும் முப்பது மாச மாவது உள்ள இருந்துட லாம்னு முடிவு பண்ணிட்டேன்.
றீகாவல் துறையை கடுமையா எதிர்த் தீர்களே?
இப்போ அப்படி இல்ல. ஏன்னா நிரந்தர நண்பனும் இல்ல. நிரந் தர எதிரியும் இல்லங்க றதுதான் அரசியல்ல முதல் பாடம். போலீஸ் காரர்களை என் சகோத ரர்களாகத்தான் பார்க்கிறேன்.
றீஜெயில்ல எப்படி பொழுது போகுது?
ஆரோக்யம் பெறுவது எப்படி? பொது ஜனம் & போலீஸ் உறவு... இப்படி பல தலைப்புல முப்பது, நாப்பது புத்தகம் எழுதியிருக்கேன். புத்தக வெளியீட்டு விழாவை நான் வெளியில வந்ததும் பிரமாண்டமா நடத்துவேன். அடுத்ததா நாலு பார்ட் சினிமா எடுக்குற அளவு என் வாழ்க்கையை திரைக்கதையா எழுதிட்டு இருக்கேன்.
றீஎதிர்காலத் திட்டம் என்ன?
என்ன அப்படி கேட்டுட்டீங்க? 2011 தேர்தல்ல போட்டியிட்டு ஆட்சிய புடிக்கிறதுதான் லட்சியம்.
றீசினிமா நடிகர், நடிகைகள் பிரசாரத்துல குதிச்சிருக்காங்களே?
யாருக்கு எந்தத் தொழில் தெரியுதோ அதத்தான் செய்யணும். காசுக்கு ஆசப்பட்டு சம்பந்தமில்லாத வேலைய செய்றது தப்பு. சினிமாவுல நடிக்கவே அனுபவம் கேட்கும் போது அரசியல்ல குதிக்க அனுபவம் வேண்டாமா?
றீநடிகர், நடிகைகளுக்கு அரசியல் தெரியதுங்கறது உங்கள் கருத்தா?
தெரியாதவங்க அரசியலுக்கு வரக் கூடாதுன்னுதான் சொல்றேன். விந்தியாவுக்கும், சிம்ரனுக்கும் தமிழே தெரியாது. தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும்? ஏட்டுக்கும் எஸ்.பி.க்கும் வித்தியாசம் தெரியாத விந்தியா எல்லாம் அரசியல்பத்தி பேசக் கூடாது.
றீசினிமாவை வெறுத்து பேசுறீங் களே?
இல்லவே இல்ல. என் கதைய சினிமாவா தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் இன்னமும் காத்துக் கிடக்குறாங்க. கதை எழுதி முடித்த தும் சொந்தமா சினிமா தயாரிக்க லாம்னுதான் இருக்கேன். அப்ப தெரியும் சினிமாவ நான் எந்த அளவு நேசிக்கிறேன்னு.
றீசிறையில எந்த குறையும் இல்லாம நிம்மதியா இருக்கீங்கனு எழுதிடலாமா?
ஒரே ஒரு குறை இருக்கு. என்னன்னா டிவியில என் முகத்த அடிக்கடி காட்டினாங்க. இப்ப அப்படி காட்டுறதே இல்ல. ஜனங்க என்ன மறக்காம இருக்க டிவியில தொடர்ந்து என் முகத்தக் காட்ட ணும்னு உங்க மூலமா வேண்டுகோள் வைக்கிறேன். பழச மறக்காம என்னையும் பேட்டி எடுத்து பத்திரிகையில என் முகத்த காட்ட வந்த உங்களுக்கு நன்றி.
றீதமிழக வாக்காளர்களுக்கு உங்க வேண்டுகோள்...
வந்தாரை வாழவைக்கும் தமிழ கமே... வந்தாரால் வீழ்ந்து விடாதே... இதுதான் என் வேண்டுகோள்...
(அங்க என்ன பத்திரிகைகாரன் கிட்ட பேச்சு, வண்டியில ஏறும்மா... என்று போலீசார் மிரட்ட... ‘இதோ வந்துடுறேன் அண்ணே...’ என்று பவ்யமாக ஓட்டை வேனில் ஏறினார் ஜெயலட்சுமி.)
கற்பனை: முருகு
No comments:
Post a Comment