Thursday, July 5, 2012

சிரிப்போ சிரிப்பு


காமெடி கிங் யாரு?
சாமிகள் அடிதடி (30-4-06)

தேர்தல் பிரசாரத்தில் கோ.சாமியும், சு.சாமியும் எதிர் எதிரே சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது....
சு.சாமி: வாரும் கோ.சாமி... நானு யாரு தெர்யுமா... என்க்கு டமிலு நாட்ல மட்டும் இல்ல, உலகம் முழுக்கோ ரசிகருங்கோ இருக்காங்கோ. அந்த நம்பர் ஒன் இடத்த புடிச்சிரலாம்னு நீங்கோ கனவு காணாதீங்கோ...
கோ.சாமி: மதிப்பிற்குரிய அண்ணன் சு.சாமி அவர்களே...  நான் கர்ஜித்தால் அத்தனை பேரும் அரண்டு போவார்கள். என்னை மிரட்டலாம் என்று தாங்கள் கனவு காண வேண்டாம்.
சு.சா.:  டமிலு நாட்ல அதுவும் எலக்ஷன் டைம்ல நீங்கோ காமெடி பண்ணி என்  இடத்த புடிக்க நீங்க போடுற சதி திட்டம் எனக்கு புடிக்கல.
கோ.சா.: திறமை இருந்தால் வாய்ப்பு கிடைக்கும். அன்று நீர் காமெடி கிங். இன்று நான். அது காலத்தின் கோலம்.
சு.சா.: அது முடியாது... நான்தான் நிரந்தர காமெடி கிங். இடையில வந்து பிரச்னை பண்ண வேணாம். நீங்க பண்ண தேச விரோத செயல்கள், ஊழல்கள், பித்த லாட்டங்கள் எல்லாம் வெளியிட்ருவேன்.
கோ.சா.: நீங்கள் பண்ணாத அரசியல் பித்தலாட்டங்களா? அந்நிய நாட்டு ஏஜென்டிடம் கை நீட்டி...
சு.சா.: நா பணம் வாங்கினத புரூப் பண்ண முடியுமா? நீங்கோதான் கூட்டணி வைக்க போர்ட்டி குரோர்ஸ் வாங்கினதா உங்க தொண்டருங்களே கேள்வி கேட்கறாங்கோ... அப்படி வெல போறவன் இல்ல இந்த சு.சாமி...
கோ.சா.: சு.சாமி அவர்களே உங்கள் கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். நீங்கள் எல்லாம் தலைவர்... உங்களுக்கு கட்சி ஒரு கேடா?
சு.சா.: மரியாதையா பேசும் கோ.சாமி... உங்கோ கட்சி லட்சணம் தெரியாதா? மொதல்ல 1.5 மக்கள் ஆதரவு. நேத்தைக்கு கணக்கெடுப்புல 1.3 சதவிகிதம் ஆதரவு.... இப்போ கணக்கெடுத்தா எவ்ளோவோ யாருக்கு தெரியும்.  ஹா... ஹா... இந்த லட் சணத்துல என்னை குறை கூற உமக்குதான் தகுதி இல்லை.
நீங்கோ எத்தன கோடி வாங்கிருக்குதுனு கண்டு புடிக்க சி.பி.ஐ. விசாரணை கேட்டு கேசு போடுவேன். இந்த நாட்டு மக்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும்.
கோ.சா.: எனது கட்சிக்கு செல் வாக்கு இல்லை என்கிறீர். பின்னர் எப்படி நாப்பது கோடி தந்திருப்பார்கள்?
சு.சா.: அநியாயமா ஏமாந்து போனோமேனு பணம் கொடுத்தவா கவலயில இருக்கறதா எனக்கு தகவல் வந்திருக்கு. பணத்த திருப்பி கேட்டாலும் கேட்பாங்கோ.
கோ.சா.: குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றே வந்திருக்கிறீரா?
சு.சா.: குழப்புறது நான் இல்லே. இத்தன நாளும் பாசிச ஆட்சி... அராஜக ஆட்சி... ஒழிக்கணும்னு பேசின நீங்கோ அதே ஆட்சி நீடிக்கணும்னு குழப்பவாத அரசியல் பண்றது நீங்கோதான்.
கோ.சா.: கோபம் கொப்பளிக்கிறது. மரியாதையா போய்விடும்.
சு.சா.: என் காமெடி வழியில் வந்ததற்கு மரியாதையா மன்னிப்பு கேளும்... அல்லது உம் மீது வழக்கு போடுவேன்...
(வழக்கு என்றதும் கோ.சாமி கோபத்தின் உச்சிக்கே போய் கைகலப்பில் இறங்கிவிடுகிறார். வேடிக்கை பார்த்தவர்கள் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.)
கற்பனை: முருகு

No comments:

Post a Comment