Monday, August 3, 2020

கொரோனா விழிப்புணர்வு பாட்டு

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே

தங்கச்சி கண்ணே - சில

புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

தங்கச்சி கண்ணே - சில

புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

 

அதிபர் வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் -அம்மா

அகிலம் சுற்றக்கூடாது எந்நாளும் (புருஷன்)

 

லாக்டவுனு ஊரடங்கை மதிக்கணும் – நமக்கு

சேவை செய்யும் டாக்டரையும் துதிக்கணும்

 

ஊரடங்கு தளர்வு நேரத்துல மார்க்கெட் போகணும்

காய்கறியை வாங்கிப்போட்டு உப்பு தண்ணியில கழுவி

சமையல் வேலைய துவக்கணும் (புருஷன்)

 

கூடிப் பேசும் மக்கள் முன்னால் நில்லாதே – நீ

மாஸ்க் போட மாட்டேனுன்னு சொல்லாதே

 

அரசு சொல்லும் அமுத வாக்கத் தள்ளாதே – நம்ம

சொந்தம் பந்தம் உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே (புருஷன்)

 

மக்கள் உயிரை மீட்டுத் தந்தது மருத்துவர்தான் – ஓய்வு

உறக்கம் இல்லாம உழைப்பது தூய்மை பணியாளர்தான்

சட்டதிட்டங்களை காத்து நிப்பது காவலர்தான்... அவுங்க

ஆஸ்திக் கணக்கு சொன்னா தியாகம் ஒண்ணுதான்

ஆஸ்திக் கணக்கு சொன்னா தியாகம் ஒண்ணுதான் (புருஷன்)

 

புருஷன் கூட நீ இருந்து

பழச்சாறு மூலிகை பானம் மூணு லிட்டர்

தண்ணிய குடிச்சி நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடாம

நெறஞ்சுக் கிட்டு ஆஆஆஆஆஆ

 

யோகா செஞ்சு... கபசுரநீர் குடிச்சி...

நீராவி பிடிச்சி... சூரிய குளியல் போட்டு...

விலகியிருக்கணும்

தனிச்சிருக்கணும்

வீட்டில இருக்கணும் தங்கச்சி

 

நீ நோயில்லாம நொடியில்லாம

நூறு வயசு வாழலாம் தங்கச்சி- நமக்கு

சாமி துணை இருக்கு... சாமி துணை இருக்கு தங்கச்சி.

 

/........................