Thursday, July 5, 2012

டைம் பாஸ்


தூக்கி எறிஞ்சா கண்ணு கொளமாச்சி... (16­-4-06)

அ.தி-.மு.க. கூட்டணியில் சீட்டுக்கு தவமாய் தவமிருந்து கேட்டது கிடைக்காததால் வேறு வழியின்றி தனித்து நிற்கிறார் விஜய டி.ராஜேந்தர். அவரது பாட்டை, பேச்சை கேட்போமா? (கற்பனைதாங்க!)
‘‘அடங்கொப்பன் மவனே... கொப்பன் மவனே... டண்டனக்கா... டண்டனக்கா... மதுவென்னும் அரக் கன விலக்குங்க என்றாரே காந்திஜீ... அவர் கொள்கய நாம மறந்துட்டோம்... இந்த நாடெங்கும் கடய தெறந்துட்டோம்...’’
இந்த பாட்ட நான் ஏன் இப்ப பாடுறேன்னு புரியுதா? எனக்கு எப்பவுமே நிரந்தர எதிரி மது. ஆனா இப்போ வீதிக்கு வீதி இருக்குது டாஸ்மாக். இந்த டி.ஆர். படமெல்லாம் எப்பவுமே வாங்கும் பாஸ்மார்க்... படம் எடுத்தா கதை, வசனம், எடிட்டிங், டைரக்ஷன், பாட்டு, இசை, ஒளிப்பதிவு எல்லாமே நான்தான். கட்சி நடத்தினா தலைவர், செயலாளர், பொருளாளர், மாவட்டம், வட்டம், நகரம், தொண்டன் எல்லாமே நான்தான்.
அந்தம்மாக்கு ராசி நம்பரு ஒம்பது! நான் கேட்ட சீட்டும் ஒம்பது! தந்திருந்தா பண்ணியிருக்க மாட்டேன் வம்பு! தராட்டி போன்னு துணிஞ்சி நிக்க இருக்குது தெம்பு! ‘டெபாசிட்’ போனா போகுது துரும்பு! இருக்கவே இருக்காண்டா சிம்பு!
இந்த இடத்துல வைக்கிறேன்டா ஒரு பாட்டு! யாரும் ஓடிடாதீங்க அத கேட்டு! தட்டிப் பாத்தேன் கொட்டாங்கச்சி... தாளம் வந்தது ‘சீட்ட’ வச்சி... ஊட்டி வளத்தேன் ஏலா என் தங்கச்சி... தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி... பாதியிலே வந்த சொந்தம் பெருசென்று நீ ஆதி முதல் வளத்த என்ன வெறுத்திட்டியே... யாரென்னு நீ கேட்கும் ஆளாகினேன்... போவென்று நீ விரட்டும் நாயாகினேன்...
யாருக்கும் அடிபணிய மாட்டான் இந்தத் தாடி! அப்படி தப்புக் கணக்கு போடுறவன் ஆயிடுவான் பேடி! என்ன எதுக்கிறவன் போயிடுவான் அரசியல விட்டே ஓடி! அரசியல்ல நான் பாக்காத ஆளா? சொடக்கு போட்டா போதும் ரசிகர் பட்டாளமே திரண்டு வரும். பேர மாத்திக்கிட்டா நான்தான் அடுத்த முதல்வர்னு சொன்னது ஜோசியரு! அதனால பேர மாத்திக்கிட்டான் இந்த டி.ஆரு.! பர்கூர் எலக்ஷன்ல விட்டேன்டா ரெயிலு! ஆனாலும் ஆயிட்டேன்டா பெயிலு! கோடையில தாங்கலடா வெயிலு! பழனி முருகனுக்கு வாகனம் மயிலு!
கோழிக்கு வந்தா கோழிக் காய்ச்சல். கொழந்தைக்கு வந்தா டெங்கு காய்ச்சல். அதுவே அரசியல்வாதிக்கு வந்தா தேர்தல் காய்ச்சல்.
லைசென்ஸ் வேணும்னா ஆர்டிஓ ஆபீசுல போடச் சொல்வாங்கடா எட்டு! அஞ்சு வருஷ ஆட்சிக்கு லைசென்ஸ் தான் நீங்க போடப் போற ஓட்டு! ஜெயிக்கணுமேனு கொட்டிக் கொடுப்பாங்க துட்டு! காச வாங்கிட்டு  வச்சுடாதீங்க எனக்கு வேட்டு!
 முருகு

No comments:

Post a Comment