Thursday, July 5, 2012

சிரிப்போ சிரிப்பு


கூட்டணியாம்... கூட்டணி!

(29-3-06)
தேரிக்குடியிருப்பு வாசகர்
என்.முருகன் இயற்றிய கானா கானம்.
(வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் மெட்டில் படித்து ரசிக்கவும்)
வைகோவுக்கும் ஜெயாவுக்கும் கூட்டணியாம்
அந்த லெட்டர் பேடு கட்சியெல்லாம் ஆதரவாம்
அந்த நடுத்தெருவில் நடக்குதய்யா ஒப்பந்தம்
அங்கு ஆளுங்கட்சி ஆளுங்கெல்லாம் கும்மாளம்
ஓ... ஓ-...
கூட்டணியாம் கூட்டணி கூட்டணியாம் கூட்டணி

ஊர்வலத்தில் ஆடி வரும் சி.ஆர்.சரசுவதி நாட்டியம்
என் மேளதாளம் முழங்கி வரும் காவல்துறை வாத்தியம்

மார்க்கெட் போன முரளி நடத்தி வர்றார் பார்ட்டியும்
நம்ம மார்க்கெட் போன முரளி நடத்தி வர்றார் பார்ட்டியும்
அங்கு தலைகுனிந்து போகுதய்யா ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் நட்புங்க
இத பார்த்துவிட்ட உளவுதுறை வச்சதய்யா பெட்டிங்க
பஞ்சாயத்து தலைவரான மதுரை ஆதீனம்தானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும்
உடன்பாடு தானுங்கோ
தொகுதி பங்கீடு முடிஞ்சு வருது பாருங்க      (வைகோவுக்கும்)

வைகோ சொந்தபந்தம் பொடாகைதிங்கோ
அந்த கணேசனும், செஞ்சியும்
கலகலன்னு இருக்குது
அம்மா சொந்த பந்தம் சசிங்கோ
அந்த பன்னீரும், வளர்மதியும்
வரவழைப்ப தருகுது வரவழைப்ப தருகுது

மதிமுக தலைவரு வைகோ கலிங்கப்பட்டிதானுங்கோ
அந்த அதிமுக தலைவி ஜெ.வுக்கு போயஸ் தோட்டம்தானுங்கோ
இந்த கூட்டணிய நடத்தி வைக்கும்
காளிமுத்து நம்ம அண்ணங்கோ
இந்த குளறுபடிய வாழ்த்துகின்ற
பெரிய மனுஷன் யாருங்கோ... (டப்... சோடா குடிக்கிறார்)
தலைவரு... திருமா... தானுங்கோ.

No comments:

Post a Comment