எனது தலைமை ஆசிரியர் திரு. தியாகராஜன் சார் அவர்கள் எனது திருமணத்துக்கு எழுதிய கவிதை இது. தற்பெருமைக்காக வெளியிடுகிறேனா, ஆசிரியர் தினத்தில் அவருக்கு பெருமை சேர்க்க வெளியிடுகிறேனா, கவிதைப்படி நடக்கிறேனா தெரியவில்லை. (அப்பவே என் மீது நாத்திக வா
சனை அடித்ததை இந்த கவிதை வெளிச்சம் போடுகிறது)
முருகா வாழ்க
அழகு என்றால் முருகு
முருகு என்றால் அழகு
மயிலேறும் முருகனல்ல நீ
மயில் வெறுக்கும் முருகன் நீ
வடிவேல் முருகனல்ல நீ
வடிவில் மனத்தில் முருகன் நீ
சேவற்கொடி முருகன் அல்ல நீ
சேவைக்கு ஓடிவரும் முருகன் நீ
குன்றேறும் முருகன் அல்ல நீ
குணக்குன்று முருகன் நீ
திருச் செந்தில் அதிபன் அல்ல நீ
திருமகள் இலட்சுமி தாணையத்தான் நீ
வணக்கத்திற்குரிய வாலறிவன் அருளால்
வாழிய பல்லாண்டு நலமுடனே
என வாழ்த்தும்
ஆசிரியர்
தா.தியாகராஜன்.
2.9.96
முருகா வாழ்க
அழகு என்றால் முருகு
முருகு என்றால் அழகு
மயிலேறும் முருகனல்ல நீ
மயில் வெறுக்கும் முருகன் நீ
வடிவேல் முருகனல்ல நீ
வடிவில் மனத்தில் முருகன் நீ
சேவற்கொடி முருகன் அல்ல நீ
சேவைக்கு ஓடிவரும் முருகன் நீ
குன்றேறும் முருகன் அல்ல நீ
குணக்குன்று முருகன் நீ
திருச் செந்தில் அதிபன் அல்ல நீ
திருமகள் இலட்சுமி தாணையத்தான் நீ
வணக்கத்திற்குரிய வாலறிவன் அருளால்
வாழிய பல்லாண்டு நலமுடனே
என வாழ்த்தும்
ஆசிரியர்
தா.தியாகராஜன்.
2.9.96
No comments:
Post a Comment