Sunday, September 9, 2012

சிரிங்க பாஸ்

இதுதான்டா ஃபேஸ்புக் நட்பு

பேஸ்புக்ல ரெக்கொஸ்ட் கொடுத்து நண்பர்கள் ஆனோம். 
லைக், கமெண்டுனு நாட்கள் உருண்டோடின. 
ஒருநாள் சாட்டிங். எங்கே இருக்கீங்கனு விசாரிக்க ஆரம்பிச்சேன். சென்னைதான். நானும்தான். இந்த ஏரியா... நானும் அதே ஏரியாதான். இந்த தெரு... அட நானும் அதே தெருதான். 
வீட்டு நம்பர்? ஆச்சர்யம் தாங்கல. பக்கத்து வீட்டு நம்பர். 

அப்புறம்தான் புரிஞ்சுது. அவர் என் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்.
தினமும் எதிர் எதிரே பார்த்தாலும் பார்க்காத மாதிரி போவோமே அவரா இவர்? 

# பக்கத்து வீட்ல யார் இருக்கானு கூட விசாரிச்சு தெரிஞ்சுக்காத சென்னையில இந்த நட்பு அவசியம்தான்.

No comments:

Post a Comment