எதுக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமோ?
என் மகன் படிக்கும் வகுப்பில் ஒரு நிறுவனம் வந்து டெஸ்ட் ஒன்றை வைக்கிறது. சுமார் அறுபது மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்ட அந்த தேர்வில் என் மகன் முதல் ரேங்க் வாங்கிவிட்டான். அதற்கான சர்டிபிகேட்டை கொண்டு வந்து என்னிடம் காட்டினான். பிரமாதமாக இருந்தது சர்டிபிகேட். அசத்தலாக இருந்தது சர்டிபிகேட். ஆனால் எனக்கு ஆச்சரியம். 'ஆங்கிலத்தில் பாஸ் மார்க் வாங்கவே கடும் சிரமப்படும் எ

ன் மகனா முதல் ரேங்க் வாங்கினான்' என்று ஆனந்தக் கண்ணீர் வேறு வர ஆரம்பித்தது.
அவனிடம் விசாரித்தேன். ''நான் அந்த கொஸ்ட்டின் பேப்பர படிக்கவே இல்ல. பதில் எழுத ஒரு பேப்பர் கொடுத்தாங்க. அதுல நம்பர் போட்டு ஏ, பி, சி, டி னு ஆப்சன் கொடுத்துருந்தாங்க. குருட்டாம்போக்குல டிக் பண்ணினேன். அவ்ளோதான். நான்தான் பர்ஸ்ட் ரேங்க்'' என்றான் சந்தோசத்தோடு.
''நீ படிச்சி வாங்கியிருந்தா நான் பாராட்டியிருப்பேன். இத எப்படி பாராட்டுறது''னு கேட்டேன்.
''போங்கப்பா. நீங்க ஒருமுறையாவது இப்படி சர்டிபிகேட் வாங்கினது உண்டா?''னு கேட்கறான்.
என்ன பண்றது? அறிவாளிங்க இப்படித்தான் செலக்ட் ஆவாங்களோ?

No comments:
Post a Comment