சென்னை - தமிழ் முரசு
ஷூட்டிங்கும் மீட்டிங்கும்!
நடிகர் கார்த்திக்: என்ன? என்ன? பேட்டியும் இல்ல. ஒண்ணுமில்ல. யார்? யார் வரச்சொன்னது உங்கள?நிருபர்: உங்க பேட்டி, அறிக்க வரா தான்னு தமிழகமே ஏங்கிக்கிடக்குது. பேட்டி கிடையாதுன்னா எப்படி சார்?
கார்த்: சும்மா... சும்மா சொல்றீங்க. நான் தான் ஒரு ரவுண்டு போய்ட்டு வந்துட்டேனே.
நிரு: பரவாயில்ல. உங்க கொள்கை கள் மக்களுக்கு போய் சேரவேண்டாமா--?
கார்த்: ஓகே... ஓகே... பேட்டிய சீக்கிரமா முடிச்சிரணும்.
நிரு: நீங்க அரசியலுக்கு வர காரணம் என்ன?
கார்த்: பாத்தீங்கள்ல இதுக்குதான் பேட்டி வேணாம்னு சொன்னேன். எனக்கே காரணம் தெரியாத கேள்வியெல்லாம் கேட்டு குழப்புவீங்க...
நிரு: அதவிடுங்க. நீங்க ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்கல?
கார்த்: பார்வர்டு பிளாக் கட்சி தமிழ்நாட்டுல பெரிய கட்சினு கேள்விப்பட்டேன். அதுல நின்னா உடனே சிஎம் ஆயிடலாம். அப்புறம் பார்லிமெண்ட் எலக் ஷன்ல பிஎம் ஆயிடலாம்னு ஒரு கணக்கு... சின்ன கணக்கு... அவ்வளவுதான்... ஆனா நான் என்னவோ சினிமாவுல ‘பிளாக்’ மணி வாங்குனேன்... அதான் பார்வர்டு ‘ப்ளாக்’ புடிச்சி போச்சிதுனு சிலர் பேசிக்கறாங்களாம். அதெல்லாம் சும்மா... தப்பு... தப்பு...
நிரு: கூட்டணி அமைக்கலாம்னு நீங்க பேசியிருந்தீங்களே--?
கார்த்: எஸ்... எஸ்... பேசுனேன்... இப்போ என்ன அதுக்கு? கூட்டணி சேந்து ஜெயிச்சோம்னா துணை முதல்வர் பதவிய அந்தக் கட்சிக்கு கொடுக்க நான் தயாராதான் இருந்தேன். யாருமே அதுக்கு ரிஸ்க் எடுக்கலையே... அதான் 111 தொகுதியில தனிச்சி போட்டினு அறிவிச்சிட்டேன்.
நிரு:அத்தனையும் ஜெயிச்சாலும் தனி மெஜாரிட்டி கெடைக்காதே-?
கார்த்: அது எனக்கு அவ்வளவா தெரியாது. இருந் தாலும் தேர்தலுக்கு பின்னாடி கூட்டணி ஆட்சி தான் வரும்னு பேசிக்கி றாங்க இல்லையா... அப்போ என்ன முதல்வர் ஆக்குனாதான ஆதரவு கொடுப் பேன்...
நிரு: உங்க முதல் எதிரி யார்?
கார்த்: எதிரியா? எனக்கு சினிமாவுலயும், அரசியல் லயும் எதிரியே கெடயாது.
நிரு: சந்தானத்த கட்சிய விட்டு நீக்கிட்டீங்களே அது சரியா?
கார்த்: அவருக்கு யாரையும் அனுசரிச்சி போகத்தெரியல... அதான்...
நிரு: திராவிட கட்சிகள பத்தி உங்க கருத்து என்ன?
கார்த்: அய்யோ... அவ்வளவு பெரிய கேள்வியெல்லாம் கேட்கறதே தப்பு... பார்வர்டு பிளாக் கட்சிய பத்தியே எனக்கு இன்னும் தெரியாது... அரசியல்ல எனக்கு ரெண்டு பேரதான் தெரியும். ஒன்னு பிஸ்வாஸ், இன்னொருத்தர் சந்தானம். ஸோ... திராவிட கட்சி... அது இதுன்னு கேட்டு என்ன குழப்பாதீங்க... ப்ளீஸ்...
நிரு: உங்க கூட்டம்னாலே கூச்சல் குழப்பத்துல பாதியிலேயே முடிஞ்சு போகுதே?
கார்த்: அதான் எனக்கும் புரியல... உங்களுக்கு தெரியுமா? ஒருவேள சந்தானம் ஆட்களோட சதியா இருக்குமோன்னு தோணுது...
நிரு: போஸ்டர் ஒட்டக்கூட தேர்தல் கமிஷன் தடை போட்டிருக்கே?
கார்த்: சினிமாவுக்கு எப்படி போஸ்டர்அவசியமோ அப்படித்தான அரசியலுக்கும். அததடுக்குறது தப்பில்லையா? இருந்தாலும் பிஸ்வாஸ் கிட்ட கேட்டுதான் என்னால எதுவும் சொல்ல முடியும்...
நிரு: தேர்தல் வாக்குறுதியா என்ன கொடுக்கப் போறீங்க?
கார்த்: அதெல்லாம் கட்சியோட அகில இந்திய தலைமை பாத்துக்கும்.
நிரு: ஒருவேள நீங்க முதல்வர் ஆயிட்டா என்ன பண்ணுவீங்க?
கார்த்: ஹா... ஹா... ஹா... ஹே... ஹே... ஹே... அந்த அதிர்ஷ்டம் தமிழக மக்களுக்கு இருக்கான்னு தெரியலையே...
நிரு: சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்திருக்கீங்க... இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கார்த்: பெரிய வித்தியாசம் எதுவுமே இல்ல. அதுல பாட்டு, பைட்டு எல்லாம் உண்டு. இதுல கெடயாது... அதுல டைரக்டர் சொல்றபடி நடிக்கணும்... உம்... இதுல தலைவர் சொல்றபடி நடிக்கணும். அது வெற்றியா தோல்வியானு ரிலீஸ் அன்னைக்கு தெரிஞ்சிடும்... இதுவும் ஓட்டு எண்ற அன்னைக்கு தெரிஞ்சிடும். அதுல ஹீரோதான் ஜெயிப்பாங்க... இதுல யார் வேணாலும் ஜெயிக்கலாம்... உம்... அதுல என்னால ஷூட்டிங் கேன்சல் ஆகும்... இதுல என்னால மீட்டிங் கேன்சல் ஆகுது...
நிரு: அரசியலபத்தி இவ்வோ தெரிஞ்சி வச்சிருக்கீங்களே... பாராட்டுக்கள்... யாருக்கும் ஆதரவு இல்லைன்னு நடிகர் ரஜினிகாந்த் அறிவிச்சிருக்காரே... அது பத்தி...
கார்த்: இதுக்குமேல என்னால பதில் சொல்ல முடியாது. வேணும்னா என் ‘டூப்’ப அனுப்பி வைக்கிறேன்...
(விருட்டென எழுந்து சென்று விட்டார். இப்படி ஒரு தலைவரா? பெருமூச்சுவிட்டபடி நடையை கட்டினார் நிருபர்)
முருகு
சென்னை 26&3&06
No comments:
Post a Comment