டென்ஷனைக் குறைக்கும்
கார்ட்டூன் ஜோக்ஸ்களின் தொகுப்பு!
தமிழ்ப் பத்திரிகை உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ட்டூனிஸ்டுகளில் ஒருவர். ‘தமிழ் முரசு’மாலை நாளிதழில் வெளியாகும் பாக்கெட் கார்ட்டூன்
‘அடேங்கப்பா’வை நகைச்சுவையோடு தந்து ஏராளமான உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வருபவர். ‘குங்குமம்’ வார இதழில் ‘மிஸ்டர் கைப்புள்ள’, ‘செல் சிந்தியா’ என்ற கேரக்டர்களை உருவாக்கிச் சிரிக்க வைத்தவர். வாய்விட்டுச் சிரிக்க வைத்து, நோய்விட்டுப் போக வைப்பதால் இவர் ஒரு காமெடி மருத்துவர்.
இவரது ஜோக்குகள் நாளிதழ், வார இதழ்களில் ஏராளமாக வெளி வந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு இவர் பிறந்த மண்.