Tuesday, October 14, 2014

மளிகைக்கடை வைத்த ஓவியர்

மளிகைக்கடை வைத்த ஓவியர்
நான் பத்திரிகை துறையில் பிழை திருத்துபவனாக பணியை ஆரம்பித்தேன். இது தற்காலிகம்தான். எப்படியாவது ஓவியனாகிவிட்டால் போதும். ஓவியர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. மற்றவர்களைவிட கைநிறைய சம்பாதிக்கலாம் என்று மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அந்த வாய்ப்பும் வந்து சேர்ந்தது. அதன்பிறகு சென்னைக்கு வந்து, சீனியர் ஓவியரிடம் நன்றாக பழகிய பிறகு அவரது சம்பளத்தை கேட்டேன். அவர் சம்பளத்தை சொன்னதும் சீட்டுக்கட்டுபோல என் ஆசையெல்லாம் அப்படியே சரிந்துவிழுந்தது.

அவர் சுமார் 25 ஆண்டுகளாக பத்திரிகையில் ஓவியராக பணி புரிந்து வருகிறவர். அவரே இவ்ளோதான் வாங்குகிறாரா..  சரிதான் நாம ஏமாந்து போய்விட்டோம் என்று மனதை தேற்றிக்கொண்டேன். அந்த சீனியர் திடீரென ஒருநாள் நான் இந்த வேலையை விட்டு செல்கிறேன். பெட்டிக்கடை வைக்கப்போகிறேன் என்றார். பெட்டிக்கடை வைக்கவும் அனுபவம் வேணும் சார் என்றேன். அதெல்லாம் உறவினர் இருக்கிறார்கள் கற்றுக்கொள்ளலாம் என்று துணிவோடு சென்று, சொன்னது போலவே சின்னதாக ஒரு மளிகைக்கடைக்கு ஓனர் ஆகியும் விட்டார் என்பது வேறுகதை. என்னை நல்லா கவனிச்சுக்கோங்க... இல்லேன்னா பெட்டிக்கடை வைக்கப் போயிட்டான்னு ஃபீல் பண்ண வேண்டியிருக்கும். சொல்லிட்டேன்...